தெற்கு பிலிப்பைன்சில் செவ்வாய்க்கிழமை 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தெற்கு பிலிப்பைன்சில் உள்ள டாவோ ஆக்சிடென்டல் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது. இன்று காலை 9.39 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பலுத் தீவின் தென்கிழக்கே 434 கிலோ மீட்டர் தொலைவிலும், 122 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக எரிமலை மற்றும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தின் காரணமாக, சுனாமி ஏற்படுவதற்கான அபாயம் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், இலங்கையின் புத்தல பகுதியில் நேற்றிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.4 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் கொழும்பில் இருந்து 154 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.