இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில் ஐ.ஆர்.சி.டி.சி, தனது 24 -வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது. இதனால், பயணிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்தின் இணையதளம் அல்லது செயலி மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடு விமான கட்டணத்தின் சேவை கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி, அறிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ளிட்ட கிரெடிட் கார்டுமற்றும் டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்வதன் மூலம் ரூ.2000 வரை சேமிக்க முடியும்.
இந்த சலுகை 100 நாட்களுக்கு முன்பு பயணத்திட்டத்தை வகுத்துக் கொள்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் பதிவு செய்யும் விமான டிக்கெட்டிற்கு ரூ.50 லட்சம் வரை பயணக்காப்பீடு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.