மேட்டுப்பாளையத்தில் நடைபெறவிருந்த, என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 4 -ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
நாளை நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கொண்டாடும் மீலாது நபி பண்டிகை. மேட்டுப்பாளையத்தில் நாளை மீலாது நபி ஊர்வலம் மற்றும் நமது நடைபயணத்தால் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை கருத்தில் கொண்டு நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையத்தில் நாளை நடைபெறவிருந்த நமது…
— K.Annamalai (@annamalai_k) September 27, 2023
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கொண்டாடும் மீலாது நபி பண்டிகை. மேட்டுப்பாளையத்தில் நாளை மீலாது நபி ஊர்வலம் மற்றும் நமது நடைபயணத்தால் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையத்தில் நாளை நடைபெறவிருந்த நமது என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
நமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பை நல்கிய கோவை வடக்கு மாவட்ட பாஜக சகோதர சகோதரிகளுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களையும் மேட்டுப்பாளைய மக்களையும் 4 -ஆம் தேதி நமது நடைபயணத்தின் போது சந்திக்க ஆவலுடன் உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.