இந்தியர்கள் உலகளவில் கடினமான உழைப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றில் சிறந்தவர்கள் என்பதை உலகெங்கிலும் நிரூபித்து வருகிறார்கள்.
அந்தவரிசையில், பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிகேஷ் அரோரா (Nikesh Arora) குறித்துப் பார்ப்போம்,
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில், பிப்ரவரி 9 1968-ஆம் ஆண்டு இந்திய விமானப்படை அதிகாரிக்கு நிகேஷ் அரோரா பிறந்தார். விமானப்படை பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்த இவர், வாரணாசியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், வடகிழக்குப் பல்கலைக் கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
நிகேஷ் அரோரா விப்ரோ டெக்னாலஜிஸில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்நிறுவனத்தில் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பு மேலாண்மை ஆகியவற்றில் பல்வேறு தலைமைப் பதவிகளை வகித்தார்.
இதன் பின், Deutsche Telekom நிறுவனத்தின் ஐரோப்பிய மொபைல் வணிகத்திற்கான தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாகச் சேர்ந்தார். பின்னர், கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து பல்வேறு உயர் பதவிகளை வகித்த இவர், 2014-ஆம் ஆண்டு கூகுளை விட்டு வெளியேறி, ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான சாப்ட் பேங்கின் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரி ஆனார்.
இவ்வாறு, படிப்படியாக உயர்ந்த நிகேஷ் அரோரா, சைபர் செக்யூரிட்டி நிறுவனமான பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.