ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் மேலும் ஒரு தங்க பதக்கம் வென்றுள்ளது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி இதுவரை 16 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்நிலையில் இன்று மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் ஒற்றையர் பிரிவுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக சிஃப்ட் கவுர் சாம்ரா மற்றும் ஆஷி சௌக்சே பங்குபெற்றனர்.
இதில் இந்திய அணியின் சிஃப்ட் கவுர் சாம்ரா 469.6 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கம் வென்றார். இதுமட்டுமின்றி உலக சாதனை, ஆசிய சாதனை, ஆசிய விளையாட்டுப் போட்டியின் சாதனை என அனைத்து சாதனைங்களையும் முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார் சிஃப்ட் கவுர் சாம்ரா.
இந்திய அணியின் மற்றொரு வீராங்கனையான ஆஷி சௌக்சே இதே போட்டியில் 451.9 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் சீன அணியின் வீராங்கனை 462.3 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் ஒரே நாளில் ஒரே பிரிவில் இந்திய அணி இரண்டு தங்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.