மதுரையிலிருந்து மும்பைக்கு தட்சிண அதிசயங்கள் சுற்றுலா இரயில் செப்டம்பர் 28-ந் தேதி மாலை 4:00 மணிக்கு புறப்படுகிறது.
இந்த இரயில் விருதுநகர், திருநெல்வேலி, திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பாலக்காடு, ஈரோடு, சேலம் வழியாக செப்டம்பர் 30-ந் தேதி காலை 7:00 மணிக்கு தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத் மௌலாலி பகுதிக்குச் செல்லும்.
அப்பகுதியில் சார்மினார், கோல்கொண்டா கோட்டை, ராமோஜி பிலிம் சிட்டியை பார்த்த பிறகு அக்டோபர் 1-ந் தேதி இரவு 8:00 மணிக்கு அவுரங்காபாத் புறப்படும்.
அப்பகுதியில் உள்ள அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களைப் பார்த்த பிறகு, அக்டோபர் 3-ந் தேதி இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு அக்டோபர் 4-ந் தேதி காலை 8:30 மணிக்கு மும்பையை சென்றடையும்.
மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரை, தொங்கும் தோட்டம், கேட் வே ஆப் இந்தியா, மரைன் டிரைவ், பாந்த்ரா பாலம் ஆகிய இடங்களைப் பார்த்து இரசித்த பின், இரவு 7:00 மணிக்கு கோவா மட்கான் புறப்படும்.
அக்டோபர் 5 மற்றும் 6-ந் தேதி கோவாவில் மாண்டவி நதி, காலன்குட் பீச், கதிட்ரல் பீச் ஆகியவற்றைக் கண்டு இரசித்த பிறகு அக்டோபர் 6-ந் தேதி மாலை 6:30 மணிக்கு சுற்றுலா முடிந்து, அக்டோபர் 7-ந் தேதி இரவு 9:15 மணிக்கு மதுரை கூடல் நகர் வந்து சேரும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.