சனாதனம் உலகிற்கு இன்றியமையாதது. சனாதனம் ஒரு போதும் அழியாது, அழிக்கவும் முடியாது. சிலர் தங்களது சுயநலத்திற்காக சனாதனத்தை திரித்துக் கூறுகின்றனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.
சென்னையில் உடுப்பி ஸ்ரீவித்ய திஷ்ய திர்த்த சுவாமி சானதன உத்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “சனாதனம் என்பது வேர் போன்றது. வேர் இல்லாமல் மரம் வளர முடியாது. அதேபோல, சனாதன தர்மம் என்பது அடிப்படையானது. பாரதம் உருவானதே சனாதன தர்மத்தில்தான். ஆகவே, பாரதம் இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்ளாது. சனாதனத்தில் எல்லாமே இருக்கிறது.
சனாதனத்தின் அடிப்படை அத்தியாயம் நமது வேதங்களில் இருக்கிறது. சனாதனத்தின் மிகவும் முக்கியப் பகுதியாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இடங்கள் சனாதனத்திற்கான சான்றாகத் திகழ்கிறது. அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியாவை பாரத் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். சனாதனம் என்னும் அடிப்படை உரிமையை உடைப்பது நாட்டை பிளவுபடுத்துவது போன்றது. அந்த அடிப்படையிலேயே ஆங்கிலேயர்கள் நம் நாட்டை உடைத்தனர். சிலர் தங்களது சுயநலத்திற்காக சனாதனத்தை திரித்துக் கூறுகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.