கன்னியாகுமரி மாவட்டத்தில், வயலிலிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் ஈரமாக இருப்பதால் அதனை எடுக்க முடியாது என்று அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழி, செண்பக ராமன் புதூர், இறச்சகுளம், திட்டுவிளை உள்ளிட்ட இடங்களில் தற்போது அறுவடை நடந்து வருகிறது. இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல்களை விவசாயிகள் தோவாளை கொள்முதல் நிலையத்தில் கொடுப்பது வழக்கம்.
ஆனால், நெல் ஈரமாக இருப்பதால் எடுத்துக் கொள்ள முடியாது என சமீப காலமாக அதிகாரிகள் திருப்பி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொள்முதல் நிலையத்தில் 100 கிலோ நெல்லுக்கு ரூ.2,265 வழங்கப்படும். ஆனால் தனியார் ரைஸ்மிலில் 87 கிலோவுக்கு ரூ.1,750 கிடைக்கும். இதில் வண்டி வாடகை செலவுகள் அதிகமாக உள்ளது.
ஏற்கனவே, கஷ்டத்தில் உள்ள விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கை திமுக தொடர்ந்து புறக்கணித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, இந்த விவகாரத்திலாவது, விவசாயிகள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்