இந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இதில், இந்திய ஏஜெண்டுகளின் பங்கு உள்ளது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். அவரது குற்றச்சாட்டை இந்தியா திட்டமவட்டமாக மறுத்தது.
கனடா மண்ணில் கனடாவின் குடிமகனின் கொலைக்குப் பின்னால் இந்திய அரசு இருக்கலாம் என்று கனேடிய அமைப்புகள் கருதுகின்றன என்றும், நமது மண்ணில் நடந்த கொலைக்குப் பின்னால் வெளிநாட்டு அரசு இருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும், இது நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்றும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கனடாவில் உள்ள இந்தியாவின் தூதரக அதிகாரியை அந்நாட்டு அரசு வெளியேற்றியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் இருந்த கனடாவின் தூதரக அதிகாரியை 5 நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசும் உத்தரவிட்டது.
மேலும், இந்திய தூதரகம் கனடியர்களின் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது. இந்தியாவின், இந்த அதிரடி காரணமாக, கனடா நாடு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சரி, அன்று முதல் இன்று வரை
உண்மையில் என்னதான் நடக்கிறது?
காலிஸ்தானிகள் கனடாவில் தஞ்சம் அடைவது புதிதல்ல. இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை இருந்து வருகிறது.
காலிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னரே, கனடாவில் ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாத வலையமைப்பை உருவாக்கி விட்டனர்.
கடந்த 1971 -ம் ஆண்டில், இந்தியாவின் ஆனந்த்பூர் சாஹிப் நகரில் பிரிவினைவாதத் தீர்மானத்தை காலிஸ்தான் நிறைவேற்றியது. மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல்வாதியும், பல் மருத்துவருமான ஜக்ஜித் சிங் சவுகான், கனடாவில் தங்கியிருந்தபோது தன்னை காலிஸ்தானின் ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டார். நாங்கள் இனி காத்திருக்கப் போவதில்லை. இறுதிப் போரைத் தொடங்குகிறோம். இது எங்கள் சொந்த தேசம் என உரிமை கொண்டினர்.
அதே 1971-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானின் சுல்பிகர் அலி பூட்டோ காலிஸ்தானித் தலைவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார். இதன் மூலம் காலிஸ்தான் – பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒன்றோடு ஒன்று கைகோர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து, கனடாவில் காலிஸ்தான் தனது வேர்களை மிக வேகமாகவும், ஆழமாகவும் வளர்த்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில், பொக்ரான் சோதனை தளத்தில் இந்தியாவின் முதல் அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்தது.
கனேடிய ஒத்துழைப்போடு இயக்கப்பட்ட CIRUS அணு உலையில் இருந்து புளூட்டோனியம் பயன்படுத்தப்பட்டது. இது கனடாவை கோபப்படுத்தியது. ஆனால், இது ஒரு அமைதியான அணு வெடிப்பு என்றும், கனடாவுடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இந்தியா ஒதுபோதும் மீறவில்லை என்றும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனாலும், கனடா இதை ஏற்கவில்லை.
கனடாவின் அன்றைய பிரதமர் பியர் ட்ரூடோ, இந்தியாவின் அணுசக்தி திட்டத்தில் இருந்து அனைத்து ஆதரவையும் விலக்கிக் கொண்டார், மேலும் மற்றொரு அணு உலையில் பணிபுரிந்த கனேடிய அதிகாரிகள் திரும்ப அழைத்துக் கொண்டார். இப்படி, இந்தியா மீது தொடர் வன்மத்தை செலுத்தி வருகிறது கனடா.
இந்த நிலையில்தான், 1970 -ம் ஆண்டு முதல் 1980 -ம் ஆண்டு வரை, பியர் ட்ரூடோவின் ஆட்சியில் பெரும்பாலான காலிஸ்தானிகள் கனடாவில் குடியேறத் தொடங்கினர் என்று கனடாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் விஷ்ணு பிரகாஷ் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அன்று, ட்ரூடோவும், இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் வருத்தங்களை பகிர்ந்து கொண்டதையும் இதற்கு ஆதாரமாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமகவே, தீவிரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளான காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கனடா பாதுகாப்பான புகலிடமாக இருந்து வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதற்கான ஆதாரங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
இதனிடையே, 1985 -ல், காலிஸ்தானி தீவிரவாத அமைப்பான பாபர் கல்சா, ஏர் இந்தியா கனிஷ்கா மீது குண்டுவெடிப்பைத் திட்டமிட்டி நடத்தி 329 பேரைக் கொலை செய்தது. அப்போது, தீவிரவாத குழுவின் தலைவர் தல்விந்தர் பர்மர், பியர் ட்ரூடோவால் பாதுகாக்கப்பட்டார். இது இந்தியா – கனடா இடையே உறவுகளை மேலும் மோசமாக்கியது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது தந்தையின் வழிகளை அப்படியே பின்பற்றுகிறார் என்ற விமர்சனம் எழுத்தொடங்கிவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இன்றைய பாரதத்தின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 7,70,000 சீக்கியர்கள் கனடா அரசாங்கத்திற்கு முக்கியமானவர்களாக கருத்தப்படுகின்றனர். காரணம், சீக்கியர்களை தனது வாக்கு வங்கியாக ஜஸ்டின் ட்ரூடோ பயன்படுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஆக மொத்தம், தீவிரவாத்திற்கு ஆதரவு கொடுத்து அழிந்துபோய்க்கொண்டிருக்கும் பாகிஸ்தான் போலவே, கனடாவும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலமும், ஆதரவும் கொடுத்து வருகிறது. அதன் பலனை விரைவில் கனடா அனுபவிக்கப்போகிறது என்பதே கண்முன் காணப்போகும் நிஜம்.