சீர்மிகு நகரம் திட்டத்தில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. மேலும், கோவை, தஞ்சை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகள் சிறந்த மாநகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2015 -ம் ஆண்டில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. நாட்டில், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும், நாட்டின் 100 நகரங்களில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, உறுதி செய்யப்பட்ட மின்சாரம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, திறமையான நகர்ப்புற இயக்கம், தூய குடி நீர் வசதி, பொது போக்குவரத்து, மலிவு வீடுகள், தகவல் தொழில் நுட்ப இணைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல், நல்ல நிர்வாகம், மின் ஆளுமை மற்றும் குடிமக்களின் பங்கேற்பு, குடிமக்களின் பாதுகாப்பு, பெண்கள், குழந்தைகளுக்குக் கல்வி ஆகியவற்றை உறுதி செய்கிறது.
இந்த நிலையில், சீர்மிகு நகரம் திட்டத்தில் தமிழகத்திற்கு 2 -வது இடம் கிடைத்துள்ளது. மேலும், கோவை, தஞ்சை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகள் சிறந்த மாநகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.