19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை வென்று வருகிறது.
இன்று ஆண்களுக்கான ஸ்கீட் துப்பாக்கி சுடுதல் ஒற்றையர் பிரிவுப் போட்டி இன்று நடைபெற்றது. அதில் இந்திய அணியின் சார்பாக ஆனந்த் ஜீத் பங்குபெற்றார்.
இதில் ஆனந்த் ஜீத் 58 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். இந்தப் பிரிவில் இந்தியா வெள்ளி பதக்கத்தை வெல்வது இதுவே முதல்முறையாகும்.
மேலும் 60 புள்ளிகளை பெற்று குவைத்தின் அப்துல்லா அல்ராஷிதி தங்கப் பதக்கமும், 46 புள்ளிகளைப் பெற்று கத்தாரின் நாசர் அல் அத்தியா வெண்கலமும் பெற்றுள்ளனர்.
தங்கம் வென்றுள்ள அப்துல்லா அல்ராஷிதி 60 புள்ளிகளை பெற்று இந்தியாவின் அங்கத் வீர் சிங்கின் உலக சாதனையுடன் சமன் செய்துள்ளார்.
இதுவரை நடந்த அனைத்து ஆசிய விளையாட்டு போட்டிகளையும் சேர்த்து ஆனந்த் ஜீத் இந்தியாவிற்காக 12 பதக்கங்களை பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.