இந்த ஆண்டு 1 மில்லியன் அமெரிக்கா விசா விண்ணப்பங்கள் செயலாக்கப்படவுள்ளது.
டெல்லியில் இன்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார் செட்டி, MITயில் பட்டப்படிப்புக்காக சென்ற தங்கள் மகனைப் பார்க்க, இந்திய தம்பதியருக்கு ஒரு மில்லியனாவது விசாவை நேரில் வழங்கினார். தூதர் எரிக் கார்செட்டி தம்பதியரிடம் விசாவை ஒப்படைக்கும் போது “மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஒன் மில்லியன்” என்று வாழ்த்தினார். அடுத்த ஆண்டு மே மாதம் இந்த ஜோடி அமெரிக்கா செல்லவுள்ளது.
இந்த மைல்கல், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே அவர்களின் மூலோபாய கூட்டாண்மைக்கு இடையே வலுவான உறவுகளை குறிக்கிறது. கொரோனா தொற்றுநோய்க்குப் பின் இந்தியர்கள் மத்தியில் அமெரிக்காவிற்கு பயணிக்கும் ஆர்வம் அதிகமாகியுள்ளது.
இந்த ஆண்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோருக்கான விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதன் மூலம் இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம் அதன் இலக்கை தாண்டியுள்ளது.
இது குறித்து எரிக் கார்செட்டி கூறும் போது,
இந்தியா, இந்தியர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. “பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி ஜோ பிடனும் விசா விரைவாகச் வழங்க செய்வதில் சிறந்த வேலையைச் செய்வோம் என்று கூறியுள்ளனர், எனவே வெளியுறவு அமைச்சகம் ஹைதராபாத் போன்ற இடங்களில் அதிக அமைப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாக்களை வழங்க, வேலை செய்யும் விதத்தை மாற்றி, கடினமாகவும் புத்திசாலித்தனமாகவும் பணி செய்து, இந்த ஆண்டுக்கான ஒரு மில்லியன் விசா விண்ணப்பங்களைச் செயல்படுத்தினோம்.
“இந்தியாவுடனான எங்கள் கூட்டாண்மை அமெரிக்காவின் மிக முக்கியமான இருதரப்பு உறவுகளில் ஒன்றாகும். எங்கள் மக்களிடையேயான உறவுகள் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளதால், வரும் மாதங்களிலும் தொடந்து சாதனை அளவிலான விசா வழங்கும் பணி தொடரும் என்று கூறினார்.
கடந்த ஆண்டு, 1.2 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்தனர், இது உலகின் மிக முக்கியமான பயண உறவுகளில் ஒன்றாக உள்ளது. இப்போது உலகளவில் உள்ள அனைத்து விசா விண்ணப்பதாரர்களில் 10%க்கும் அதிகமானோர் இந்தியர்களாக உள்ளனர், 20% மாணவர் விசாக்களையும், 65% H&L-வகை வேலைவாய்ப்பு விசாக்களையும் பெறுகின்றனர்.
அதிகரித்து வரும் அமெரிக்க விசாக்களுக்கான தேவையை நிவர்த்தி செய்ய, அமெரிக்கா இந்தியாவில் தனது நடவடிக்கைகளில் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. அமெரிக்க தூதரகம், விசா செயலாக்கத்தை சீராக்க தனது பணியாளர்களை விரிவுபடுத்தியுள்ளது, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வசதிகளை மேம்படுத்தியது மற்றும் ஹைதராபாத்தில் புதிய தூதரக கட்டிடத்தை திறந்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.