அயோத்யாவிலிருந்து ராமேஸ்வரம் வரை 290 ஶ்ரீராம் தூண்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தகவல் பரபரப்பு வெளியாகியுள்ளது.
பகவான் ஸ்ரீராமர் பிறந்த இடமான அயோத்தியில், ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராம பிரானுக்குப் பிரம்மாண்ட திருக்கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் பூமி பூஜையைக் கடந்த 2020 -ம் ஆண்டு பாரதப் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த கோவிலில் சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் ரூ.1,800 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் திருக்கோவிலின் மொத்த பரப்பளவு 2.7 ஏக்கர். இதில் 57,400 சதுர அடியில் திருக்கோவில் அமைய உள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்படும்.
மேலும், 3 அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ்த் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2 -வது தளத்தில் 74 அறைகளும் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 12 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த திருக்கோவில் திறக்கப்பட உள்ளதாக உத்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அயோத்யாவிலிருந்து ராமேஸ்வரம் வரை ஶ்ரீராம் தூண்கள் அமைக்கப்பட உள்ளது. அந்த வகையில் சுமார் 290 இடங்களில் ஸ்ரீராம் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அசோக் சிங்கல் பவுண்டேஷன் கவனித்து வருகிறது