சென்னையில் வரும் 3-ம் தேதி பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் வரும் 3 -ம் தேதி முக்கிய நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் மோடியை பிரதமர் ஆக்குவோம் என்ற முழக்கத்துடன், என் மண் என் மக்கள் 2-ம் கட்ட யாத்திரையைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தென்காசி மாவட்டத்தில் தொடங்கினார். தற்போது, நடைபயணம் கோவை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நடைபயணத்தில், பாஜகவுக்கும் பொது மக்கள் அமோக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தமிழக பாஜகவும் தயாராகி வருகிறது.
இந்த நிலையில், வரும் 3-ம் தேதி சென்னையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர் என கூறப்படுகிறது.