5 மாநிலத் தேர்தல்: டெல்லியில் கூடும் பா.ஜ.க. மத்தியத் தேர்தல் குழு!
Oct 18, 2025, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 மாநிலத் தேர்தல்: டெல்லியில் கூடும் பா.ஜ.க. மத்தியத் தேர்தல் குழு!

வேட்பாளர்களை இறுதி செய்ய நாளையும், நாளை மறுநாளும் ஆலோசனை!

Web Desk by Web Desk
Sep 29, 2023, 02:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசம் , சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக, பா.ஜ.க.வின் மத்தியத் தேர்தல் குழுக் கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெறவிருக்கிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இவற்றில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளும் மேற்கண்ட மாநிலங்களை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், பா.ஜ.க. சற்று முன்னிலையில் சென்று கொண்டிருக்கிறது.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 39 பேர் அடங்கிய முதல் பட்டியலை கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதியே பா.ஜ.க. வெளியிட்டது. இதையடுத்து, செப்டம்பர் 13-ம் தேதி தேசியத் தலைநகர் டெல்லியிலுள்ள கட்சியின் தலைமயகத்தில், பா.ஜ.க.வின் மத்தியத் தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 25-ம் தேதி மேலும் 40 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை வெளியிட்டது. இன்னும் 151 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட வேண்டும். அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 21 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. மீதமுள்ள 69 பேர் அடங்கிய பட்டயல் வெளியிடப்பட வேண்டும். அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்துக்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான மீதி வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக, பா.ஜ.க. மத்தியத் தேர்தல் குழுக் கூட்டம் நாளை கூடுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தேர்தல் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள அனைத்து இடங்களும் ஏ., பி., சி. மற்றும் டி என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏ வகையில், கட்சி தொடர்ந்து வெற்றிபெற்று சிறப்பாகச் செயல்படும் இடங்கள் அடங்கும். அதேபோல, பி பிரிவில் வெற்றி மற்றும் தோல்விகளின் கலவையான இடங்கள் உள்ளன. மேலும், சி வகையில் கட்சி ஒப்பீட்டளவில் பலவீனமான இடங்களைக் குறிக்கிறது. இதற்கு நேர்மாறாக, கடந்த 3 தேர்தல்களில் பா.ஜ.க. தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் இடங்கள் டி பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கேற்ப வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து இக்கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Tags: bjpCental Electon committeeSeptember 30
ShareTweetSendShare
Previous Post

மூன்று பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை இஷா சிங் !

Next Post

ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? : நயினார் நாகேந்திரன்

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் – போலீசாருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

மக்களுக்கு திமுக கொடுத்தது அல்வா மட்டும்தான் – வினோஜ் பி.செல்வம்

தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தேவை – வானதி சீனிவாசன்

டி.ஆர்.பி ராஜா அமைச்சரைப் போல பேச வேண்டும் – அன்புமணி

தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21-ம் தேதி விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு!

நெல்லையில் பட்டாசு, புத்தாடை வாங்கி திரண்ட மக்கள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

கோவை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த மக்கள் : சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies