தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கையால் தயாரிக்கப்பட்ட பொம்மை இரயிலில் சிறிய விநாயகர் சிலைகள் கரைக்கக் கொண்டுச் செல்லப்பட்டது.
விநாயகர் சதுர்ச்சி முடிந்து விநாயகர் சிலைகளைக் கரைக்க பல வாகனங்களைக் கொண்டு செல்லவோம். இந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க ஒரு புதிய முயற்சி செய்துள்ளனர். கையால் தயாரிக்கப்பட்ட பொம்மை இரயிலில் சிறிய விநாயகர் சிலைகளை கொண்டு சென்று கரைத்தனர்.
அதில் கையால் செய்யப்பட்ட நீராவி இன்ஜின் இரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொரு சிறிய விநாயகர் சிலைகள் மற்றும் விநாயகர் அருகில் ஒவ்வொரு எமோஜிகல் கொண்டு சென்று கரைக்கப்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் பிரமித்துப் போனார்கள்.
இது ஒரு பக்கம் இருக்கப் பெரிய விநாயகர் சிலை ஊர்வலத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி ஆடி பாடி மகிழ்ந்த போது அங்கு இருந்த காவலர்களும் “நாங்களும் ஆடுவோம்” என்று தமிழ் பாட்டான அப்படிப் போடுப் போடு பாட்டுக்கு எப்படி எப்படியோ ஸ்டெப் போட்டு நடனமாடினார்கள்.
விநாயகர் வெள்ளத்தில் கரைவதற்கு முன்பு மக்கள் வெள்ளத்தில் மனதளவில் குளிர்ந்து இருப்பார் என்று தான் சொல்லவேண்டும்.