சென்னை டிபிஐ வளாகத்தில், திமுக அரசுக்கு எதிராக இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் 17 ஆசிரியர்கள் மயக்கமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டிபிஐ வளாகத்தில், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரவில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டக்களத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களில் 17 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர். அவர்கள் அனைவரையும் உடனே ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் சங்கத்திற்கு ஆதரவாக மேலும், சில அரசு ஊழியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் குதிக்க உள்ளதால், திமுக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு நிலவி வருகிறது.