நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று 2021-2022 ஆம் ஆண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட என்.எஸ்.எஸ் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள், திட்ட அலுவலர்கள், என்.எஸ்.எஸ் அலகுகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், +2 கவுன்சில்களுக்கு அவர்களின் தன்னார்வ சேவையை அங்கீகரிக்கும் வகையில் இன்று விருதுகள் வழங்கப்பட்டது.