100 மீ தூரத்திற்கு சிக்சர் அடிச்சா 10 ரன்கள் வழங்க வேண்டும். ஐசிசிக்கு ரோகித் சர்மா கோரிக்கை.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது.
தற்போது இந்திய அணி வீரர்கள் இறுதி கட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா யூடியூப் வீடியோ ஒன்றில் பேசியது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஹிட்மன் என்று இரசிகர்களால் ரோகித் சர்மா அழைக்கப்படுவதற்கு காரணம் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை மூன்று இரட்டை சதம் அடித்திருக்கிறார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 551 சிக்ஸர் அடித்திருக்கிறார். கெயில் 553 சிக்சர் உடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ரோகித் சர்மா சிக்ஸருக்கு ரன் அளிப்பது குறித்து ஐசிசிக்கு வினோத கோரிக்கை ஒன்று வைத்திருக்கிறார்.
அதில் இப்போது ஒரு பேட்ஸ்மேன் 90 மீட்டர் தூரத்துக்கு ஒரு சிக்ஸர் அடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஐசிசி எட்டு ரன்கள் கொடுக்க வேண்டும். இதுவே ஒரு பேட்ஸ்மேன் 100 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடிக்கிறார் என்றால் அதற்கு 10 ரன்கள் கொடுக்க வேண்டும். இப்படி மிகப்பெரிய தூரத்தில் சிக்ஸர் அடிக்கும் போது அதற்கான பலன் பேட்ஸ்மேன்களுக்கு வழங்க வேண்டும்.
ஆனால் இப்போது இருக்கும் விதிப்படி எல்லைக்கோட்டை தாண்டினாலே அதற்கு சிக்சர் வழங்கப்படுகிறது. அது எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி அதுக்கு வெறும் ஆறு ரன்கள் தான் கொடுக்கப்படுகிறது. எல்லாம் 100 மீட்டர் தூரத்திற்கு கஷ்டப்பட்டு சிக்சர் அடிக்கிறார்கள். அதற்கும் 6 ரன்கள் தான் கிடைக்கிறது. ஆனால் நாங்கள் சும்மா பந்தை தூக்குகிறோம். அது பவுண்டரி லைனை மட்டும் தான் தாண்டுகிறது. அதற்கு நாங்கள் ஆறு ரன்கள் பெறுகிறோம்.
இது நியாயமே கிடையாது சிக்ஸர் போகும் தூரம் வைத்து ரன்கள் வழங்க வேண்டும். இதுவே சரியாக இருக்கும் என ரோகித் சர்மா கூறினார். இதைப் போன்று தன்னுடைய வாழ்நாள் கிரிக்கெட்டில் ஸ்டெயின் பந்துவீச்சை பார்த்து தான் கொஞ்சம் நெருக்கடியை சந்தித்து இருப்பதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.