கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனத்துக்கே, மறுபடியும் ஒப்பந்தம் வழங்கும் திமுகவின் நடைமுறைகள், உலகத்தில் எங்குமே இல்லாத வழக்கம் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதும், அதற்கான அவகாசத்தை நீட்டிப்பதும் வழக்கமான நடைமுறைதான்.
கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதும், அதற்கான அவகாசத்தை நீட்டிப்பதும் வழக்கமான நடைமுறைதான். ஜூனியர் அமைச்சரான உதயநிதி விளையாட்டுத்தனமாக இருக்காமல், தன் கட்சியில் உள்ள சீனியர் அமைச்சர்களிடம், அமைச்சரவை நடைமுறைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம். ஆனால், கருப்புப்… https://t.co/m6YMHwOgOD pic.twitter.com/OLbAlsBcVb
— K.Annamalai (@annamalai_k) September 29, 2023
ஜூனியர் அமைச்சரான உதயநிதி விளையாட்டுத்தனமாக இருக்காமல், தன் கட்சியில் உள்ள சீனியர் அமைச்சர்களிடம், அமைச்சரவை நடைமுறைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம்.
ஆனால், கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனத்துக்கே, மறுபடியும் ஒப்பந்தம் வழங்கும் திமுகவின் நடைமுறைகள், உலகத்தில் எங்குமே இல்லாத வழக்கம். திமுக விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், 2026 ஆம் ஆண்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பது உறுதி.
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 54 இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இன்னும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்பதை, விளையாட்டுத் துறை அமைச்சருக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.