தெற்கு இரயில்வேக்கு 7 வந்தே பாரத் இரயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, இரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதல் நாட்டில், வந்தே பாரத் இரயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இரயில் சேவை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்திய ரயில்வே துறையால் இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் இரயில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் RDSO என்ற Research Design and Standards Organisation வடிவமைத்தது. சென்னையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை (ICF) மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் தற்போது 33 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், வடக்கு இரயில்வேக்கு 5, மத்திய இரயில்வேக்கு 4, வடக்கு மேற்கு இரயில்வேக்கு தலா 3, தெற்கு மத்திய இரயில்வே, தெற்கு கிழக்கு இரயில்வே, கிழக்கு இரயில்வே, கிழக்கு மத்திய இரயில்வேக்கு என தலா 2 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தெற்கு இரயில்வேக்கு மொத்தம் 7 இரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தென் மாநில பொது மக்கள் மிகுந்த மிகழ்ச்சியில் உள்ளனர்.