உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வீழ்த்தியது.
உலகக் கோப்பை கிரிக்கெட்கான முதல் பயிற்சிப் போட்டி நேற்றுத் தொடங்கியது. இதில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் கவுஹாத்தியில் விளையாடியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குஷல் பெரேரா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் குஷல் பெரேரா 34 ரன்களை எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் முறையில் மற்ற வீரருக்கு வாய்ப்பளித்து வெளியேறினார். குசல் மெண்டிஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சமர விக்கிரமா இரண்டு ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய நிஷாங்கா பொறுமையாக விளையாடி 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 49 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்ததாக 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடியதால் 20 ஓவர்கள் வரை விக்கெட் ஏதும் விழாமல் 131 ரன்களை வங்கதேச அணி சேர்த்து. 21 வது ஓவரில் லிட்டன் தாஸ் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 28 வது ஓவரில் ஹசன் 84 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய மெஹிடி ஹசன் 67 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் இலங்கை அணி 42 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 264 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.