ஆசிய விளையாட்டுப் ஆடவர் ஸ்குவாஷ் பிரிவுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர்களுக்குப் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் பிரிவில் இந்திய ஆடவர் அணி 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.
Congratulations to our Squash Men's Team of the talented @SauravGhosal @abhaysinghk98 @sandhu_harinder and @maheshmangao on a spectacular victory at the Asian Games and bringing home the coveted Gold Medal. This effort will inspire so many young athletes to pursue sports and… pic.twitter.com/tEu9QcIgdu
— Narendra Modi (@narendramodi) September 30, 2023
இந்த வெற்றிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுக் குறித்து அவர், ” சௌரவ் கோசல், மகேஷ்மங்காவ், சந்து ஹரிந்தர், அபய் சிங் அடங்கிய திறமையான எங்கள் ஸ்குவாஷ் அணிக்கு வாழ்த்துக்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அற்புதமான வெற்றியைப் பெற்று, தங்கப் பதக்கத்தை வீட்டிற்குக் கொண்டு வந்துள்ளீர். இந்த முயற்சி பல இளம் விளையாட்டு வீரர்களை விளையாட்டைத் தொடரவும், அதில் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கும் ” என்று பாராட்டியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுக்குறித்து அவர், ” சௌரவ் கோசல், மகேஷ்மங்காவ், சந்து ஹரிந்தர், அபய் சிங் அடங்கிய எங்கள் ஸ்குவாஷ் வீரர்களுக்கு ஒரு பெரிய கைதட்டல் மற்றும் தலை வணங்குகிறோம். நீங்கள் நம் நாட்டின் மூவர்ணக் கொடியை உயர்த்தியுள்ளீர் ” என்று பதிவிட்டுள்ளார்.
A smashing victory in Squash!
Let's give our players a big round of applause: @SauravGhosal, @abhaysinghk98, @maheshmangao, and @sandhu_harinder, for winning the Gold Medal🥇in the Squash Men's Team event.
You've raised our Tiranga higher. Salute to our champions. pic.twitter.com/T8MODGGY7Y— Amit Shah (@AmitShah) September 30, 2023