பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பல்வேறு இடங்களில் தூய்மை இந்தியா திட்டம் கீழ் நாடு முழுவதும் பொதுமக்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் தூய்மைப் பணியில் ஈடுப்பட்டனர்.
கோவை அக்ரஹார சாமக்குளத்தில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று தூய்மைப் பணியை மேற்கொண்டார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,
தூய்மையே சேவை – #SwacchtaHiSeva முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, கோவை அக்ரஹார சாமக்குளத்தில், 93 வயதான விவசாயி, மாராத்தாள் பாட்டி அவர்களுடன், தூய்மைப் பணியில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி.
நீர்நிலைகளை சீரமைப்பதில் அதிக ஆர்வம் கொண்ட மாராத்தாள் பாட்டி அவர்களின் ஈடுபாடு, இளைய… pic.twitter.com/nL7FMgbI1M
— K.Annamalai (@annamalai_k) October 1, 2023
தூய்மையே சேவை ஸ்வச்தாஹிசேவா முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, கோவை அக்ரஹார சாமக்குளத்தில், 93 வயதான விவசாயி, மாராத்தாள் பாட்டி அவர்களுடன், தூய்மைப் பணியில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி.
நீர்நிலைகளை சீரமைப்பதில் அதிக ஆர்வம் கொண்ட மாராத்தாள் பாட்டி அவர்களின் ஈடுபாடு, இளைய தலைமுறையினருக்கு பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது, எனத் தெரவித்துள்ளார்.