ஜாதீய பதற்றம் - சமூக பாகுபாடுகள் கவலை தருகின்றன - ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!
May 19, 2025, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாதீய பதற்றம் – சமூக பாகுபாடுகள் கவலை தருகின்றன – ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 09:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஜாதீய பதற்றங்கள் மற்றும் சமூக பாகுபாடுகளில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நிலைமை மிகவும் கவலையளிக்கின்றன என மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செப்டம்பர் 28, 29 ஆகிய இரண்டு அழகான மற்றும் மறக்க முடியாத நாட்களை நான் கழித்தேன்.

விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர், மரம் மற்றும் பட்டாசு ஆலைகள், அச்சகங்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், மண்பாண்ட கலைஞர்கள். கைவினைஞர்கள், விஸ்வகர்மாக்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவன சங்கங்கள், சூரிய சக்தி துறை நிறுவன பிரதிநிதிகள், சமூக தலைவர்களை சந்தித்தேன்.

மேலும், அறிவாற்றல் சவால்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களை இழந்தவர்கள் மற்றும் அவர்களுக்காகவே அர்ப்பணித்துள்ள ஆசிரியர்கள் சேவையாற்றும் பார்வையிட்டேன். கல்யாணிபுரம் ஒளவை ஆசிரமத்தை சிவசைலம் கோயிலில் மக்கள் நலனுக்காக வேண்டிக் கொண்டேன். கோவிந்தபேரியில் உள்ள ஸோஹோ கிராமத்தில் ஸோஹோ நிறுவனத்தின்.

தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அவர்களின் துணிச்சலான, தனித்துவமான மற்றும் நம்பிக்கை தரும் பரிசோதனையாக மனித ஆற்றல் உள்ளிட்ட உள்ளூர் வளங்கள், பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் புதுமையான கலவையைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் விரிவான கிராமப்புற மறுமலர்ச்சியை பார்வையிட்டேன். நமது நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த மாவீரன் பூலித்தேவன், ஒண்டிவீரன், வெண்ணிக்காலாடி ஆகியோருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். தேசியவாத பெருந்தலைவர் காமராஜருக்கு அவரது நினைவு இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினேன்.

இந்த பயணம் நமது மக்களுக்கு இருக்கும் விருப்பங்கள், மற்றும் கவலைகள் பற்றிய நேரடி அனுபவத்தை எனக்கு வழங்கியது. நமது விவசாயிகள் அழுத்தத்தில் உள்ளபோதும் கூட ஆர்வமுள்ளவர்களாகவும், நமது கைவினைஞர்கள் கடுமையான தடைகளை எதிர்கொண்ட போதும் கூட லட்சியம் மிக்கவர்களாக உள்ளனர்.

சிறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்தை விரும்பினாலும், முறைப்படுத்தப்பட்ட தடைகளால் தேங்கியுள்ளன. முக்கிய தொழில்கள் ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்கின்றன.

நமது கிராமத்து இளைஞர்கள் இயல்பாகவே அறிவுஜீவிகளாக உள்ளனர். முறையான தகுதிகள் இல்லாவிட்டாலும், அவர்களிடையே சரியான உந்துதலை ஏற்படுத்தினால் ஆக்கபூர்வ மிகுதி மிக்கவர்களாக அவர்களால் திகழ முடியும். அத்தகைய சிலரை ஸோஹோ கிராமத்தில் காணலாம்.

ஜாதிய பதற்றங்கள் மற்றும் சமூக பாகுபாடுகளில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் மிகவும் கவலையளிக்கின்றன அவை சமூக நீதி பற்றிய அதிகாரபூர்வ பிரமாண்ட விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக உள்ளன என தெரிவித்துள்ளார்.

Tags: governor ravi
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மின்சார ரயில்கள் இரத்து – என்ன காரணம்?

Next Post

கர்ம வீரர் காமராஜர் : நினைவு தினம் !

Related News

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த சுற்றுலா பயணி மருத்துவமனையில் அனுமதி!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அண்ணாமலையார் கோவிலில் கையில் செருப்புடன் சாமி தரிசனம் செய்த நபர்!

கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விராட்டை கௌரவப்படுத்த 18-ம் நம்பர் டெஸ்ட் ஜெர்ஸி அணிந்த ரசிகர்கள்!

விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – ரெய்னா

ஐபிஎல் சிறந்த அணியை தேர்வு செய்த ஆடம் கில்கிறிஸ்ட்!

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரோவ்மன் பவல் விலகல்!

யோகா உலகம் முழுவதும் செல்வதற்கு காரணமாக பிரதமருக்கு நன்றி தெரிவித்த யூடியூபர்!

சாம்பியன் பட்டத்தை வென்ற இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தில் பாஜக மூவர்ண கொடி பேரணி!

ஏழுமலையான் கோயிலில் கௌதம் கம்பீர் குடும்பத்துடன் சாமி தரிசனம்!

சேவாபாரதி சார்பில் நடைபெற்ற இந்து சமய பண்பாட்டு வகுப்புகள்!

வேட்டுவம் திரைப்படத்தில் நடிக்கும் சோபிதா துலிபாலா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies