சென்னையில் நாளை பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக, மின்சார இரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை நாளை 10.30 முதல் 2.30 வரை மட்டும் மின்சார இரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான சேவை, காலை 11 மணி முதல் 3.15 வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இரயில்வே தொழில்நுடப் பணிகள் நாளை நடைபெறுவதால், கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல, செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரையிலான இரயில்கள் காலை 10.55 முதல் மதியம் 1 மணி வரை இயங்காது.
காஞ்சிபுரம் முதல் சென்னை கடற்கரை வரையிலான இரயில்கள் முழுவதுமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.