மகளிருக்கான ஹெப்டத்லான் 800 மீ ஓட்டத்தில் வெண்டக்காலம் வென்ற நந்தினிக்கு பாரத பிரதமர் வாழ்த்து.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை வென்று வருகிறது.
இந்நிலையில் நேற்று மகளிருக்கான ஹெப்டத்லான் 800 மீ ஓட்டம் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை நந்தினி அகசாரா மற்றும் ஸ்வப்னா பர்மன் ஆகியோர் பங்குபெற்றனர்.
இதில் நந்தினி அகசாரா 5712 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்வப்னா பர்மன் 5708 புள்ளிகளை பெற்று நான்காம் இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார்.
மேலும் பதக்கம் வென்ற நந்தினிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” பெண்களுக்கான ஹெப்டத்லான் 800 மீ போட்டியில் நந்தினி வெண்கலம் வென்றதை இந்தியா கொண்டாடுகிறது. விளையாட்டில் சிறந்து விளங்கும் இந்த சாம்பியனுக்கு வாழ்த்துக்கள். மேலும் அவரது வருங்கால முயற்சிகள் அனைத்துக்கும் நல்வாழ்த்துக்கள் ” என்று பாராட்டியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார், ” பெண்களுக்கான ஹெப்டத்லான் 800 மீ போட்டியில் நன்றாகச் செயல்பட்டு வெண்கலம் வென்றதுப் பாராட்டுக்குரியது ” என்று பாராட்டியுள்ளார்.