உலகிலேயே கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்கும் அரசுகளில் ஒன்றாக ஜஸ்டின் ட்ரூடோ அரசு உள்ளது. முக்கியமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்கிக்கொண்டு இருக்கிறார் என்று டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ் சமூக வலைத்தளத்தின் முதன்மை செயல் அதிகாரியும் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
கனடா நாட்டைச் சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜர். இவர் கடந்த ஜூன் மாதம் அந்நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய குருத்வாரா முன்பு, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தான் தீவிரவாதிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில், இம்மாதம் நடைபெற்ற கனடா நாட்டின் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜர் கொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு இந்தியத் தரப்பில் மறுப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்நாட்டுக்கான இந்திய தூதரை வெளியேறும்படி கனடா உத்தரவிட்டது. பதிலுக்கு இந்தியாவும் அந்நாட்டின் உயர் தூதரக அதிகாரியை வெளியேறும்படி உத்தரவிட்டதோடு, கனடா நாட்டு மக்களுக்கு விசா வழங்கவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இதனிடையே, தான் கூறியது கருத்து சுதந்திரம் எனவும், காலிஸ்தானியர்கள் கூறுவதும் கருத்து சுதந்திரம் எனவும் கனடா நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார்.
இந்த நிலையில்தான், உலகிலேயே கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்கும் அரசுகளில் ஒன்றாக கனடா அரசு உள்ளது. முக்கியமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்கிக்கொண்டு இருக்கிறார் என்று டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ் சமூக வலைத்தளத்தின் முதன்மை செயல் அதிகாரியும் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில், “கனடாவில் கடுமையாக கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சட்டங்கள் உள்ளன. உலகிலேயே கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்கும் அரசுகளில் ஒன்றாக ஜஸ்டின் ட்ரூடோ அரசு உள்ளது. சமீபத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்கு எதிராக கூட அவர்கள் சட்டம் கொண்டு வந்துள்ளனர். உலகிலேயே மிக மோசமான கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விதிகளை கொண்டு வந்துள்ளனர். முக்கியமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்கிக்கொண்டு இருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.