முடங்கும் அபாயத்தில் இருந்து தப்பியது அமெரிக்கா!
Mar 15, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முடங்கும் அபாயத்தில் இருந்து தப்பியது அமெரிக்கா!

நிதி ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் உடன்பாடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் அரசு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் சபை கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நள்ளிரவு வரை நடந்த விவாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, முடங்கும் அபாயத்தில் இருந்த அமெரிக்கா தப்பி இருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அரசு செலவினங்கள், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவை தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இதையடுத்து, வரும் நவம்பர் மாதம் வரையிலான செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஒப்புதல் பெறுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது.

இதில், அரசின் செலவினத் திட்டங்களுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் சபை எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த சபையில் எதிர்கட்சியான குடியரசுக் கட்சி அதிக பலத்துடன் உள்ளது. எனவே, ரஷ்யா போர் தொடுத்திருக்கும் உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பதற்கு, குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனினும், அக்கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, அரசு செலவினத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பால் நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேற முடியாமல் இழுபறி நீடித்தது. அதேசமயம், நேற்று முன்தினம் நள்ளிரவுக்குள் மசோதா நிறைவேறாவிட்டால், அமெரிக்காவே முடங்கும் அபாயத்தில் இருந்தது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதிக்கட்ட விவாதங்களுக்குப் பிறகு, நிதி ஒதுக்கும் மசோதா 335:91 என்ற ஆதரவுடன் நிறைவேறியது. ஆனால், உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம், இச்செலவினத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இதன் பிறகே, நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, இம்மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். எனினும், திட்டமிடப்பட்டிருந்த நிதியைவிட குறைவான நிதிக்கே தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அரசின் செலவினங்களுக்காகவிரைவில் மீண்டும் மசோதா தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: Parliamentamerica
ShareTweetSendShare
Previous Post

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ?

Next Post

பெண்களின் பாதுகாப்பை பா.ஜ.க. உறுதி செய்யும்: பிரதமர் மோடி!

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies