குருவாயூர் கிருஷ்ணன் திருக்கோவிலின் புதிய மேல்சாந்தியாக ஸ்ரீநாத் நம்பூதிரி பெறுப்பேற்றுக் கொண்டார்.
திருமாலின் வைகுண்டம், சொர்க்கமாகப் போற்றப்படுகிறது. அத்தகைய வைகுண்டத்திற்கு இணையாகப் போற்றப்படும் ஒரு திருக்கோவில் இந்த பூமியில் உள்ளது என்றால், அது குருவாயூர் கிருஷ்ணர் திருக்கோவில் மட்டுமே. இது வைணவர்களின் புனிதத் தலமாகப் போற்றப்படுகிறது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது இந்த திருக்கோவில். இந்த திருக்கோவிலை குருவாயூரப்பன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகில் அவதாரம் எடுப்பதற்கு சற்று முன்பு, தனது தந்தையான வாசுதேவருக்கும் தாய் தேவகிக்கும் குருவாயூரில் உள்ளது போல் காட்சி அளித்தார். இதனால், இந்த திருக்கோவில் தென் துவாரகை என்றும் போற்றப்படுகிறது.
இப்படி சிறப்பு வாய்ந்த இந்த திருக்கோவிலின் புதிய மேல்சாந்தியாக ஸ்ரீநாத் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். ஸ்ரீ தோட்டம் சிவசங்கர் நம்பூதிரி, குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோவிலின் பிரதான அர்ச்சகராக (மேல்சாந்தி) 6 மாத சேவைப் பணியை நிறைவு செய்தார்.
அடுத்த மேல் சாந்தியாக பொறுப்பேற்பவர் ஆறு மாதங்கள் தனது பணியை தொடர்வார்.
தினமும் அதிகாலை 2 15 மணிக்கு எழுந்து கோவில் புனித குளத்தில் நீராட வேண்டும். அதன்பின் திருக்கோவிலுக்கு வருபவர்கள் மதியம் 1 மணி வரை தண்ணீர் உட்பட எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. அவர்கள் 6 மாத காலம் இறைவனுக்கு சேவை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.