சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இன்று 6 -வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்றும் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 6 -வது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றுற்றுள்ளனர்.
இந்த நிலையில், 170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 5 நாட்களுக்கு மேலாகத் தலைநகர் சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பள்ளி, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அக்கறை காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி முடிந்ததாலே போராட்டம் தொடர்கிறது என்றும் ஆசிரியர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.