தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளராக ஆர்.கிர்லோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவியின் செயலாளராக செயல்பட்டு வந்த ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல், கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார்.
இதனால், ஆளுநரின் செயலாளர் பதவி காலியாக இருந்து வந்தது. இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்த ஆர்.கிர்லோஷ் குமார், ஆளுநரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநர் டி.ஜி.வினய், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்படுகிறார் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.