உலகளவில் பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர், எம்.எஸ்.தோனி. இவரை பலரும் ‘கேப்டன் கூல்’ என்றும் ‘ தல ‘ என்றும் அன்புடன் அழைப்பதுண்டு.
தோனி எப்போதாவது தான் தனது சிகை அலங்காரத்தை மாற்றுவார். தற்போது பல நாட்கள் கழித்து புதிதாக ஒரு ஹேர்ஸ்டைலை செய்துள்ளார்.
இவருக்கு ஆலிம் ஹக்கிம் என்பவர் புது ஹேர்ஸ்டைலை செய்துள்ளார். சிகை அலங்காரத்திற்கு பிறகு எடுத்த புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தோனியின் இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களில் இணையத்தில் வைரலாக தொடங்கி விட்டது.
தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து வரும் இரசிகர்கள், “பார்ட் டைமாக நடிக்க வந்து விடுங்கள் தலைவா..” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தோனியின் ஹேர்ஸ்டைல் எப்போதுமே அனைவரையும் கவரும் வகையில் தான் இருக்கும். அவர் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆன போதே அவரது நீளமான தலைமுடிக்காகவே பெரிதும் பேசப்பட்டார். அவர் முதல் சதம் அடிக்கும் முன்னரே அவரது ஹேர்ஸ்டைல் காரணமாக பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆகி விட்டார். எனினும், கிரிக்கெட்டில் கேப்டனாகி ஒரு நிலையை எட்டிய பின் அவர் முடியின் நீளத்தை குறைத்துவிட்டார்.
தோனி, கடைசியாக 2007ஆம் ஆண்டு உலக கோப்பைப் போட்டியின் போது நீளமான தலைமுடி வைத்திருந்தார். அதன் பிறகு, தற்போதுதான் அவர் கொஞ்சம் நீளமாக முடி வளர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.