2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் இந்திய ரயில்வே 758.20 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.
நாடு முழுவதும் இந்திய இரயில்வே துறை இரயில்கள் மூலம் சரக்கு போக்குவரத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் 758.20 மெட்ரிக் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 736.68 மெட்ரிக் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏற்றப்பட்டதை விட சுமார் 21.52 மெட்ரிக் டன் அதிகமாகும்.
கடந்த ஆண்டில் ரூ.78,991 கோடியாக இருந்த இரயில்வே வருவாய் இப்போது ரூ.81,697 கோடியை ஈட்டியுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது சுமார் ரூ.2706 கோடி அதிகமாகும்.
செப்டம்பர் 2023 மாதத்தில், 123.53 மெட்ரிக் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. இது 2022 செப்டம்பரில் 115.80 மெட்ரிக் டன்னை விட அதிகம். இது கடந்த ஆண்டை விட சுமார் 6.67% அதிகமாகும். 2022 செப்டம்பரில் ரூ.12,332.70 கோடியாக இருந்த சரக்கு வருவாய், 2023 செப்டம்பரில் ரூ.12,956.95 கோடியாக உயர்ந்துள்ளது.
வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறை, வணிக மேம்பாட்டு அலகுகளின் பணிகள் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை இரயில்வே துறை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.