சீன நிதியுதவி பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்ட நியூஸ் கிளிக்குடன் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தினார்கள். விசாரணையில் நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் அலுவலகத்திற்கு டெல்லி காவல்துறை சீல் வைத்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த நியூஸ் கிளிக் இணையதளம் சீன ஆதரவுப் பிரச்சாரத்திற்காக ரூ.38 கோடி நிதி பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது. அதில், நெவில் ராய் சிங்கம் என்ற அமெரிக்க தொழிலதிபரின் மின்னணு அஞ்சல் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் பல்வேறு பத்திரிகையாளர்கள், நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் சிபிஐ(எம்) தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட அவரது குழுவினருக்கு சீன பிரச்சாரத்தை ஊக்குவிக்குமாறு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இன்று நியூஸ் கிளிக்குடன் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு அலுவலகத்திற்கு நியூஸ் கிளிக்கின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடைப்பெற்றது.
இந்நிலையில் சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்திற்காக பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பயங்கரவாத தடுப்புச் சட்டமான யுஏபிஏவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் அலுவலகத்திற்கு டெல்லி காவல்துறை சீல் வைத்தது.