கே.சி.ஆரை கூட்டணியில் சேர்க்க மறுத்து விட்டேன்: பிரதமர் மோடி!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கே.சி.ஆரை கூட்டணியில் சேர்க்க மறுத்து விட்டேன்: பிரதமர் மோடி!

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பி.ஆர்.எஸ். அரசின் ஊழலை அம்பலப்படுத்துவோம் என்றும் சூளுரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 3, 2023, 07:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெலங்கானாவில் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்பியதாகவும், ஆனால், தான் மறுத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

கடந்த 1-ம் தேதி தெலங்கானா மாநிலத்துக்குப் பயணம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், இன்று மீண்டும் தெலங்கானா சென்ற பிரதமர் மோடி, 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சூப்பர் தெர்மல் பவர் திட்டத்தின் முதல் அலகையும் திறந்து வைத்தார். அப்போது, 2016-ம் ஆண்டு தான் அடிக்கல் நாட்டிய திட்டத்தை தற்போது தானே திறந்து வைப்பதாக பெருமிதம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் நிஜாமாபாத் நகரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இதுவரை கூறாத ரகசியத்தைக் கூறப்போகிறேன்” என்று சஸ்பென்ஸ் வைத்தபடியே பேச்சைத் தொடங்கினார். “ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றிபெற்றதும், ​​மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு பா.ஜ.கவின் ஆதரவு தேவைப்பட்டது. இத்தேர்தலுக்கு முன்பு விமான நிலையத்தில் என்னை வரவேற்றார். ஆனால், அதன் பிறகு திடீரென நிறுத்தி விட்டார்.

டெல்லியில் என்னைச் சந்திக்க வந்த கே.சி.ஆர்., உங்கள் தலைமையில் நாடு முன்னேறி வருகிறது என்று சொல்லத் தொடங்கினார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புவதாகவும் கூறியவர், அவருக்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது மோசமான ஆட்சி மற்றும் அரசியல் செயல்பாடுகளால், அவருடன் பழக முடியாது என்று நான் கே.சி.ஆரிடம் கூறிவிட்டேன். மேலும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நான் அவரை சேர்க்கவும் மறுத்து விட்டேன். காரணம், தெலங்கானா மக்களை பா.ஜ.க.வால் ஏமாற்ற முடியாது.

அதோடு, 2020 டிசம்பரில் ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. வென்ற 48 இடங்கள் தெலங்கானாவின் தலைவிதியை மாற்றுவதற்கான செயல்முறையின் தொடக்கமாகும். இதன் பிறகும், கே.சந்திரசேகர் ராவ் மீண்டும் என்னை அணுகி, தனது மகன் கே.டி.ராமராவிடம் (கே.டி.ஆர்.) அனைத்து “கரோபார்”களையும் ஒப்படைக்கப் போவதாகவும், என்னுடைய ஆசிர்வாதத்தைக் கோருவதாகவும் கூறினார்.

ஆனால் நான், இது ஜனநாயகம் என்றும், அவரது வாரிசை தெலங்கானா மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் கே.சி.ஆரிடம் கூறிவிட்டேன். கே.சி.ஆர். ஒன்றும் முடிவெடுக்கும் அரசன் கிடையாது. இதன் காரணமாக, கே.சி.ஆர். எனது நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். அதேசமயம், நான் சொல்வது என்னவென்றால், ஊழல் பெருச்சாலிகளால் எனது அருகில் உட்கார முடியாது என்பதுதான். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பி.ஆர்.எஸ். அரசின் ஊழலை அம்பலப்படுத்துவோம்” என்று கூறினார்.

Tags: PM ModiTelangana
Share
Tweet
SendShare
Previous Post

குமரியில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

Next Post

நியூஸ் கிளிக் அலுவலகத்திற்கு டெல்லி காவல்துறை சீல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies