இன்றைய இளைஞர்கள் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பத்தில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அப்போது பேசிய சபாநாயகர், முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து எடுத்துரைத்தார்.
முன்புபோல் அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டதாகவும், உண்மையாக மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்களே வெற்றி பெற முடியும் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
















