உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Sep 10, 2026, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 10, 2026, 01:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டசபையில் வீரவசனம் பேசுவது மட்டும் போதாது என்றும் வீதியில் நடக்கும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், தலைநகர் சென்னையில் சட்டம் – ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து, கந்துவட்டி மாஃபியாக்களின் கூடாரமாகத் தமிழகம் மாறிவிட்டதற்குத் திருவொற்றியூரில் நிகழ்ந்த இளைஞர் பிரதீப்பின் கொடூரப் படுகொலையே அப்பட்டமான சாட்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

“என்னை ரவுடிகள் கொல்லப் பார்க்கிறார்கள், காப்பாற்றுங்கள்” என்று காவல் நிலையத்தின் வாசலிலேயே நின்று ஊடகங்களிடம் கதறிய பிரதீப், அடுத்த நாளே நடுரோட்டில் விரட்டி விரட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கந்துவட்டிக் கொடுமையால் தவித்து, உயிருக்கு அஞ்சிக் காவல் நிலையத்திற்குப் பாதுகாப்பு தேடிச் சென்ற இளைஞரைக் காப்பாற்ற முடியாத இந்த ஆட்சிக்கு எதற்கு ஒரு காவல்துறை? என வினவியுள்ளார்.

உதவி கேட்டுச் சென்றவரைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, காவல் ஆய்வாளரே கந்துவட்டிக் கும்பலுக்கு ஆதரவாக நின்று மிரட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது.

ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே சமூக விரோதிகளிடம் அமைதியைத் தாரைவார்த்த தவெக அரசே இந்தப் படுகொலைக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

நடுரோட்டில் கதறும் அந்த ஏழைத் தாய்க்கு நீதி கிடைக்க, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதுடன், ரவுடிகளுக்குத் துணைபோன காவல் ஆய்வாளர் மீதும் பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், சட்டசபையில் வீரவசனம் பேசுவதை விடுத்து, வீதியில் நடக்கும் கொலைவெறியாட்டங்களைத் தடுத்து மக்களின் உயிரைக் காப்பதில்தான் ஓர் ஆட்சியாளரின் உண்மையான நிர்வாகத் திறமை அடங்கியிருக்கிறது என்பதை முதல்வர் ஜோசப் விஜய்  உணர வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Pradeep murder issuechennai policetvktamilnadu bjp state presidentnainar nagendran press meet
Share
Tweet
SendShare
Previous Post

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

Related News

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies