டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு மாதமும் ஆய்வுக்கூட்டம் நடத்தி தவறுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது என்றும், கூடுதல் வசூல் குறித்து புகார் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
கட்சியின் பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோவை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற புகார்களில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தவறு செய்தவர்கள் உயர் அதிகாரியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
















