பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்பேடு, நந்தனம் உள்ளிட்ட இடங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தற்போது பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதிய கட்டுமான பணிகளால் தங்களது குடியிருப்புகள் மற்றும் பாரம்பரிய மீன்பிடி வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பல தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருவதால், தங்களிடம் ஆலோசிக்காமல் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனவும், கடலோர சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















