திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தேரோட்டத்தை ஒட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கப் பெருமான் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பெரிய தேரில் எழுந்தருளினார்.
இதையடுத்து, ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும், விநாயகர் தேரும், வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரும் ரத வீதிகளில் பவனி வந்து நிலையை அடைந்தன. இந்த தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















