சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்திற்குள் தவெக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடத்தி, அதனை ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற கூட்டத்தொடரில் சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ பங்கேற்றிருந்த நேரத்தில், வாடிப்பட்டியில் உள்ள அவரது அலுவலகத்தில், மதுரை மாவட்ட தவெக மகளிர் அணி தலைவி தேவ சுஜிதா, 20-க்கும் மேற்பட்ட பெண்களுடன் சென்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், எம்எல்ஏ பயன்படுத்தும் மேஜையில் சாய்ந்தபடி பெண்களுக்கு ஆலோசனை வழங்குவது போன்ற காட்சிகளை வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, இதே அலுவலகத்தில் எம்எல்ஏ நாற்காலியில் அமர்ந்து ரீல்ஸ் வெளியிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், அரசுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் எம்எல்ஏ அலுவலகத்தை கட்சி அலுவலகமாக பயன்படுத்தி, தொடர்ந்து ரீல்ஸ் வெளியிடும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















