தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஸ்டாலின் தலைமையில், இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது தொடர்பாக அவரது இல்லத்தில் முக்கிய கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ள
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன், இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் எனவும், திமுகவின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
















