தமிழக தலைமைச் செயலகத்தில், நிர்வாக வசதிக்காக “இந்து சமய அறநிலையத்துறை” என்ற புதிய தனித்துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பணிகளை மேலும் விரைவுபடுத்தும் வகையில் புதிய துறையை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இயங்கி வந்த அறநிலையத்துறை ஆணையரகம், இனி முழுமையாக இந்த புதிய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது.
இதற்கான நிர்வாக விதிகளில் தேவையான திருத்தங்களை மனித வள மேலாண்மைத் துறை தனியாக வெளியிடும் என்றும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், மறு உத்தரவு வரும் வரை புதிய துறையின் செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















