6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா - சிறப்பு தொகுப்பு!
Sep 9, 2026, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 9, 2026, 01:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடுத்த தலைமுறை 6G தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளின் உருவாக்கம் மற்றும் பயன்பாட்டைக் கட்டமைப்பதற்கான அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் 24 நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளதாக அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள சேப்பல் ஹில்லில் கடந்த செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெற்ற G20 புத்தாக்கத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா தலைமையிலான இந்தியக் குழுவும் பங்கேற்றது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அஜித் குமார் மற்றும் MeitY, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST), தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் துறை (DPIIT) மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அமெரிக்க வர்த்தகத் துறையும், வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகமும் இணைந்து நடத்திய இக்கூட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் செழிப்பை உருவாக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், அனைத்து மக்களுக்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் கூடிய ஆற்றலை கொண்டுள்ளன என்பதை அங்கீகரிக்கும் வகையில் G20 அமைச்சர்கள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

6G தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க, கூடிய இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் லுட்னிக் மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதாவைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

semiconductors துறை மற்றும் AI தொழில்நுட்பக் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்தும், AI-க்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் data centres ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்தும் ​​ISM 2.0 திட்டத்தில் அமெரிக்காவின் முதலீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அடுத்த தலைமுறை நெட்வொர்க்குகள் அமெரிக்காவின் பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களைப் பிரதிபலிப்பதையும், போட்டித்தன்மையை வலுப்படுத்துவதையும், 6G-யில் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதையும் உறுதி செய்வதற்கான முயற்சியில் அமெரிக்கா மற்றும் பிற 24 நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக அமெரிக்க வர்த்தகத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், 6G நெட்வொர்க்குகளுக்கு அடிப்படையாக அமையவுள்ள தொழில்நுட்பத் தரநிலைகள் மற்றும் விரிவான கட்டமைப்பை வடிவமைப்பதில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் நாடுகளின் குழுவில் இந்தியாவும் இடம்பெறுகிறது.

புதுமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் குடிமக்களின் மேம்பட்ட வாழ்க்கை தரம் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், AI, semiconductors , டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு , ரோபோட்டிக்ஸ் மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மூலோபாயக் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டைமீண்டும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Tags: Ministry of Electronics and Information TechnologyJitin PrasadaNorth CarolinaUS Department of CommerceUS-led international initiative6G telecommunication networksChapel HillIndiaamericausa
Share
Tweet
SendShare
Previous Post

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Next Post

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Related News

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

Load More

அண்மைச் செய்திகள்

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் ; 3 அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்; விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் சமர்பிப்பு

5 தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies