திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், மகாமண்டப நுழைவுவாயிலில் உள்ள இரண்டு சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி தொடங்கியது.
கரூரைச் சேர்ந்த பக்தர்கள் ஒருங்கிணைந்து உபயமாக வழங்கிய, நகாஸ் வேலைப்பாடுகளுடன் கூடிய 88 கிலோ 975 கிராம் எடையிலான வெள்ளித்தகடுகள் கோயிலுக்கு வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளித்தகடுகளின் எடை சரிபார்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், வெள்ளித்தகடுகளை பொருத்தும் பணியும் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
















