குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே த.வெ.க அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் பதிலுரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், முதல்வர், அமைச்சர், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் போலீசாரின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் தலையீடு இருக்க கூடாது என வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக் குறிப்பிட்ட அவர், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தவெக அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.
பெண்களை பற்றி யாராவது அவதூறாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் முதலமைச்சர் விஜய் கூறினார். யாராவது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தாம் பேசுவதாக நினைத்தால், அதற்கு தாம் பொறுப்பாக முடியாது என்றும் அந்த எண்ணத்தில் அரசியலுக்கு வரவில்லை என்றும் முதலமைச்சர் விளக்கமளித்தார்.
















