விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்டுள்ள சுவாமி சிலைகள் வழிபாட்டு மைதானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விருதுகநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆன்மிக நற்பணி மன்றம் சார்பில் சுவாமி சிலைகள் தயாரிக்கப்பட்டு வந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள இடங்களுக்கு வண்ணமயமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.
சித்தி புத்தி விநாயகர், சிவனை வழிபடும் விநாயகர், பெருமாள் – மகா லட்சுமியை வணங்கும் விநாயகர் உள்ளிட்ட சிலைகளை பொதுமக்கள் வழிநெடுகிலும் கண்டு ரசித்தனர். இயற்கை முறைப்படி தயாரிக்கப்பட்ட இந்த சிலைகள் காவல்துறையின் பாதுகாப்புடன் வழிபாட்டு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன,
















