அமெரிக்க கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்படும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அமெரிக்கக் கடற்படை மீது ஈரான் தாக்குதல் நடத்துவதை தவிர்த்தாலே போதும் எனவும், இல்லாவிட்டால் ஈரானின் எண்ணெய் கப்பல்களைத் தங்களால் அழிக்க முடியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஈரானிய புரட்சிகரப் படை அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கினால், அதற்குப் பதிலாக அந்நாட்டு கப்பல்கள் மூன்று மடங்கு அழிக்கப்படும் என, மத்திய கட்டளைக் குழு தளபதி அட்மிரல் பிராட் கூப்பரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















