திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறுவன் கௌசிக் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மின்விளக்கு கோபுரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து சிறுவன் கௌசிக் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















